உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்பதை அடுத்த பகுதி குறிப்பிடும். அதனுள் வாங்குவோர், விற்போரின் ஊர், தெரு. தாலுக்கா, தந்தையின் பெயர். மதம். சாதி, தொழில் ஆகியவை தெளிவாக உள்ளன.

1916 ஆம் டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் கும்பகோணம் தாலுக்கா சத்திரங்கருப்பூர் கடைத் தெருவில் இருக்கும் சோமு பிள்ளை குமாரர் வெள்ளாழ ஜாதி சிவமதம் மிராசு கும்பலிங்கம் பிள்ளை அவர்களுக்கு ஷெ தாலூக்கா கொரனாட்டு கருப்பூர் கீழத் தெருவிலிருக்கும் கோவிந்த படையாட்சி குமாரன் படையாச்சி ஜாதி சிவமதம் மிராசு துரைசாமி படையாட்சி எழுதிக் கொடுத்த சுத்தகிரய சாசனம் "4

என்பது ஒரு சான்றாகும்.

இரண்டாம் பகுதி நிலத்தின் நான்கு எல்லைகளோடு அளவைகளைக் காட்டுகின்றது. பின்னர் நிலத்தின் மதிப்புத் தொகை, நிலத்தின் வருவாய், வரி கட்டுவது யார்? நில உரிமை மாற்றம், விதி முறைகளை மீறுவதால் உண்டாகும் தண்டனை போன்ற விவரங்கள் இருக்கும்.

இறுதிப் பகுதியில் மூலப் பத்திரமும் நகலும் யார் யாரிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தரப்பட்டுள்ளது. முழு மனத்துடன் சுய சிந்தனையுடன் ஒப்புக் கொள்கின்றோம் என்று வாங்குபவரும் விற்பவரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

என்று நகக்கீரலும்

இந்த கீறல் சாதிநாத அய்யரின் கைக்கீறல்5

-இஃது அப்பாசாமியின் கைநாட்டு'

என்று கைரேகைப் பதிவும் கையொப்பத்துடன் உள்ளது.

"மேற்படி ஊர் தெருவில் இருக்கும் மகன் வெற்றிவேல் சான்று

எழுதி உடன்படவும், கீரல் பூரித்ததும் அறிவேன்"

என்று எழுதி சாட்சிகள் வரிசையாக மூவர் கையொப்பம் இட்டுள்ளனர். பின்னர் அவ்வாவண வரிகளில் இடம்பெற்றுள்ள பிழைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. (எ. கா) 15ஆவது வரியில் 'லி' அடித்தல்.

குத்தகைப் பத்திரமும் சுத்தக் கிரயப் பத்திரம் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. இடைப் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கிக் கொள்பவன் வருடத்திற்கு 2 முறை நெல் அளப்பது பற்றியும், செலவிற்கு வாங்கிய பணத்தையும் நிலத்தையும் திரும்பக் கொடுப்பது பற்றிய செய்தியும் உள்ளது. சர்வே 720 என்று சர்வே நம்பர் சுட்டப்படும்.

4. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் உள்ள ஆவணம். 1916ஆம் வருடம், 53ஆவது கட்டு.

5. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் உள்ள ஆவணம், 1919ஆம் வருடம். 32ஆவது கட்டு. 6. மேற்கூறிய ஆவணம்.

7. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில உள்ள ஆவணம். 1937ஆம் வருடம், 13ஆவது கட்டு.

காகிதச்சுவடி ஆய்வுகள்

85