உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




"கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டதும் ஒரு நிறுவனத்தின் நடைமுறைப் பத்திரங்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்காலச் சந்ததியினருக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் பராமரிப்புச் செய்வதே ஆவணக் காப்பகம் 2

என்பார் கூற்று ஈண்டு நினைத்தற்குரித்து. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும், ஊரின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலங்கள் பற்றியவைகளையும், அவ்வூர் மக்களின் தனிப்பட்ட நபர்களின் நிலங்கள்பற்றிய ஆவணங்களையும் பாதுகாக்கின்ற இடமாக ஊர்ச்சபை திகழ்ந்தது போலச் சைவத் திருமடங்களும் உள்ளன.

ஆவண வகைகள்

ஒருவருக்கு நிலத்தை உரிமையாக்கச் செய்யப்படும் பத்திரம் சுத்தக் கிரயச் சாசனம் எனப்பட்டது. சில காலம் உரிமையுடையதாய் ஒற்றிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டவை குத்தகைப் பத்திரங்கள். இவை அடகுமுறை ஆவணங்கள் என்றும் அழைக்கப்பட்டன.

ஒருவர் மற்றவரிடத்து நிலங்களை மாற்றிக் கொண்டதற்கு எழுதிக் கொடுக்கப்பட்டவை பரிவர்த்தனைப் பத்திரங்கள் என்று பெயர் பெறும். இவையேயன்றித் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் முச்சிலிகா என்றும் கரார் நாமா என்றும் பெயர் பெற்றவை உள்ளன. இவை ஸ்ரீமடத்தின் அதிபரான ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளுக்குக் கீழ் அவர்தம் உத்தரவுப்படி நடத்தற்கு எழுதிக் கொடுக்கப்பட்டவை.

"அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில் செய்கின்ற பணியினை உள்ளடக்கிய கோப்புக்களைத் தங்களுடைய எதிர்காலச் சந்ததியினர் சான்றாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஆவணங்கள் உண்டு "3

கரார் நமாவும் பணியாளர்கள் தம் கடமையைத் தாமே எழுதிக் கொடுப்பதாய் உள்ளது.

ஆவணங்களின் அமைப்பு முறை

ஆவணங்கள் நில அளவுக்கு ஏற்றபடி ஒரு அணா முதல் 10 ரூபாய் வரையுள்ள முத்திரையிடப்பட்ட தாளில் எழுதப்பட்டுள்ளன. திருப்பனந்தாள் மடத்தில் கிடைக்கப் பெற்றவைகளில் கி. பி. 1840க்கு முற்பட்டவை உருது, தெலுங்கு எழுத்துக்களால் ஆனவையாக உள்ளன. அவற்றுள் பனாரஸ் டிரஸ்ரி (BENARES TREASURY) என்று முத்திரை இடப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில தஞ்சாவூர் மாவட்டத்தில் எழுதப்பெற்றவை தமிழால் ஆனவை.

சுத்தக்கிரயச் சாசனத்தின் முதற்பகுதி ஆவணங்கள் எழுதப்பெற்ற வருடம். மாதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. அதனை யார் யாருக்கு எழுதிக் கொடுத்தது

M

2

3.

84

டி ஆர் ஷெல்லன் பாக், மாடர்ன் ஆர்க்கைவங். ப. 11.

மு. இராசேந்திரன். நூலாக நூல் வல்லோர் தமிழ்நாடு நூலக மாநாட்டு மலர், 1993.

காகிதச்சுவடி ஆய்வுகள்