பக்கம்:காகித உறவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

37


வீசினாள். அவன் கால்களை கம்புகளாக நினைத்துக் கொண்டே, தாய்க்குரங்கு மரத்திற்குத் தாவியது. லாரிச்சிங்கி சிரித்துக் கொண்டே, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து, கூண்டைப் பார்த்தாள்.

சிறிது நேரந்தான். மரத்தில் ஏறிய தாய்க்குரங்கு, மீண்டும் கூண்டுக்கருகே வந்தது. கூண்டு வாயை கடித்துப்பார்த்தது. கைகளால் இடித்துப் பார்த்தது, உடம்பால் தள்ளிப் பார்த்தது, அந்த வேகத்தில் கூண்டுகூட ஆடியது. உள்ளே துடித்துக் கொண்டிருந்த குட்டிக் குரங்கு, தன் முகத்தில் படர்ந்த வேர்வையையோ, கண்ணிரையோ, வலைக் கம்பிகளை, அம்மாவின் ரோமக் கனைகளாக நினைத்துத் தேய்த்தது. தாய்க்குரங்கோ குட்டியை அணைப்பதாக நினைத்து, அதன் முகத்தைக் காட்டிய கம்பி வலையை கையால் அனைத்துக் கொண்டிருந்தது.

லாரிச்சிங்கிக்கு என்னவோ போலிருந்தது. திருமணமாகி சரியாக ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குப் பிறகு பிறந்து, இரண்டு வருடங்கள் அவளின் மடிக்குள் அடைக்கலமாகக் கிடந்து, அதிக சாராயத்தாலோ என்னவோ ஒரு நாள் இறந்து போன தன் தலை மகனின் நினைவு வந்தது. எமக்கூண்டுக்குள் இப்படித்தான் அவன் தவித்துக் கொண்டிருப்பானோ?

தாய்க்குரங்கு, தன் குட்டியைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரமாவது இருக்கட்டும் என்று நினைத்தவள் போல் மனசு கேட்காமல், இடுப்பில் தொட்டிலை மாட்டிக் கொண்டு குழந்தையை அதில் வைத்துக்கொண்டு, தெருப்பக்கமாகப் போனாள். பாசிகளை விற்ற காசில், டப்பாவுக்குள் இரண்டு இட்லிகளைப் போட்டு பிசைந்து குழந்தைக்கு உணவை ஊட்டிக் கொண்டே, ஒரு தெருவைத் தாண்டி, ஊர் முனைக்கு வந்து விட்டாள். பையன், தன் இடுப்பைப் பிடித்து அழுத்த அழுத்த, அவளுக்கு அன்னையின் வயிற்றை அரவணைப்பாய் பிடித்துக் கொண்டிருக்கும் குரங்கின் ஞாபகம் வந்தது; இந்த குரங்குளைப் பிடிப்பதற்கு பெருமளவு காரணமாக இருந்தவளும் இவளே கூண்டுக்குள், தின்பண்டங்கன்ளைப் போட்டுவிட்டு, அதோடு சேர்ந்த சன்னமான சுமார் இருநூறு அடி நீளமுள்ள இரும்புக் கம்பி முனையைப் பிடித்துக்கொண்டு. புதர்ப்பக்கமாக இருந்தவள் இவள். மணலால் மறைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியைப் பார்க்க முடியாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/39&oldid=1383363" இலிருந்து மீள்விக்கப்பட்டது