பக்கம்:காகித உறவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

லாரி சிங்கி


தின்பண்டங்களைப் பார்த்துக் கொண்டு குரங்குகள் நுழைந்தபோது இரும்புக் கம்பியை இழுத்து, கதவை மூடியவளும் இவள்தான். இப்படி பல தடவை, திறந்த கதவை மூடியவள். அப்போதெல்லாம் குரங்குகள் போடும் கூச்சலையும், பிரானனை பிளப்பதுபோல், பிரளயத்தை உண்டுபண்ணுவதுபோல் சுழலும் வேகத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது என்னவோ மாதிரி இருந்தது. காடை, கெளதாரிகளைப் பிடித்துதின்றும், பிடித்தவற்றை விற்றுத்தின்றும் பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பழக்கப்பட்ட நாடோடியான இவளுக்கு, ஏனோ அந்தக் குரங்கின் முகமே கண்களில் நிழலாடியது.

ஊர்முனையிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பூங்காவிற்குத் திரும்பி வந்தாள். இவள் வருகிறாள் என்பதையும் சட்டை செய்யாமல், தாய்க்குரங்கு கம்பி வலைக்கு மேலே குப்புறக்கிடந்தது, உள்ளே குட்டிக்குரங்கு இன்னொரு பெரிய குரங்கின் தோளில் ஏறி, அண்ணாந்து பார்த்தது. தாயும் குட்டியும் கம்பி வலையின் இடைவெளிக்குள் முகத்தோடு முகம் உரச, ஒன்றும் புரியாமல் கனத்துப் போன நெற்றியுடன் நெற்றி உரச, தலைவிதியை நொந்ததுபோல் தலையோடு தலைசேர, நிம்மதியற்ற வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுபோல, கண்ணிருடன் கண்ணிர் கலக்க நிதர்சனத்தை பாசத்தால் விழுங்கி, நெருக்கத்திற்குக் குறுக்கே நின்ற கம்பி வலையை நெடுமூச்சால் தள்ள முடியாமல் போனதால் தள்ளாடிக் கொண்டே, அகத்தோடு அகம் சேர்த்தும், முகத்தோடு முகம் சேர முடியாமல் போன நிரந்தரத்தை தற்காலிகமாக நினைத்து தற்காலிகமான இணைப்பை நிரந்தரமாக நிலைத்தவைபோல் இன்னதென்று புரியாத, இனப்படுத்த முடியாத மோனத்தின் முழுப்பாங்கில் அவை சேர்ந்தும் சோர்ந்தும் கிடந்தன, லாரிச்சிங்கி அருகில் வந்துநிற்பது கவனிக்காமலே அடித்தால் அடி என்பதுபோல் தாய், சேயைப் பார்க்க, சேய் தாயைப் பார்க்க இதரக் குரங்குகள் அரக்கி வந்துவிட்டாள் என்பதுபோல் தாய்க் குரங்கை உஷார்ப்படுத்தும் விதத்தில் கத்தின.

திரும்பிப் பார்த்த தாய்க்குரங்கு, நாலடி தூரம் வரை துள்ளிக்குதித்து நின்றது. குறத்தியை சீறிப்பாய்ந்து பயமுறுத்த முடியாது என்பதை உணர்ந்ததுபோல் அது தன் கண்ணில் சுரந்த நீரை, தோளில் வைத்துத் துடைத்தபோது லாரிச் சிங்கியும், தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கூண்டின் உள்ளே குட்டிக் குரங்கு முட்டி மோதியது. இறக்கும்போது, தன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இறந்த தன் மகனின் சுரணையற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/40&oldid=1383332" இலிருந்து மீள்விக்கப்பட்டது