பக்கம்:காகித உறவு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

53



வைஸ் பிரின்ஸிபால் புறப்படப் போனார். அதற்குள் டெலிபோன் மணி அடித்தது. முதல்வர் டெலிபோனை எடுத்துப் பரபரப்பாகக் கேட்டுவிட்டு ‘அப்படியா. நான். வரேன் ஸார். தயவு செய்து ஒங்க காலை வேணுமுன்னாலும் பிடிக்கறேன். ஸார். என் பையன்கள் சின்னஞ் சிறிசுகள் ஸார். ஸார். கண்டிக்கறேன் ஸார். இதோ புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்’ என்று சொல்லி விட்டு, டெலிபோனை வைத்தார். பிறகு அர்த்தபுஷ்டியாகப் பார்த்த வைஸ் பிரின்ஸிபாலைப் பார்த்து நம்ம பாய்ஸ். டவுன் பஸ் கண்டக்டர் ஒருவனை அடிச்சிட்டாங்களாம். அவங்க இவங்களை அடிக்கறத்துக்காக கத்தி கம்போடு புறப்படுறாங்களாம். டிரான்ஸ்போர்ட் மானேஜர் சொன்னார். நான் அங்கே போய் அவங்க காலுல விழுந்தாவது தடுக்கிறேன். நீங்க, நம்ம பையன்களை உஷார்ப் படுத்துங்க. நோ. நோ. வேண்டாம் இவங்களுக்குத் தெரிஞ்சால், தப்பு. நான் சமாளிச்சுக்கிறேன் என்றார்.

வைஸ் பிரின்ஸ்பால் படபடப்பாகப் பேசினார். "ஸார். நம்ம பையன் மேலே கைவைச்சாங்கனா, விஷயம் ஸீரியாஸாப் போகுமுன்னு சொல்லுங்க. இந்தக் கண்டக்டர்கள்; என்னதான் நினைச்சுக்கிட்டாங்க...?”

முதல்வர் மேற்கொண்டு பேசுவதற்கு நேரமில்லாதவர் போல் ஒடினார். வைஸ்பிரின்ஸிபாலான அந்தக் குழந்தையோ கல்லூரி கேட்டை மூடவும் ரோட்டிலேயே எதிரிப்பட்டாளத்தை வழி மறிப்பதற்காகவும், ஓசைப்படாமலே ஓடினார்.

ரு வாரம் ஒடியது.

கண்டக்டர்கள் கல்லூரி முதல்வரின் உருக்கமான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வரவில்லை. “என் பிள்ளைகளை அடிக்கறத்துக்கு முன்னால என்னை அடியுங்க” என்று முதல்வர் முதுகைக் காட்டியபோது, பஸ் ஊழியர்கள், புறமுதுகிட்டு நின்றனர்.

"பரவாயில்லையே... நம்ம பயலுக கலாட்டா பண்ணாமல் இருக்காங்களே” என்று முதல்வர் எந்த நேரத்தில் நினைத்தாரோ, அந்த நேரத்தில் கோபால் மீண்டும் புடை சூழ முதல்வரிடம் வந்தான்.

'ஸார் - நம் காலேஜ் யூனியனை, இனாகுரேட் செய்யாமல் இருந்தால் என்ன அர்த்தம் ஸார்...?’

நான்தான் ரெடின்னு சொல்லிட்டேனே. நீதான் அந்த அரசியல் தலைவரைக் கொண்டு வரணுமுன்னு பிடிவாதமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/55&oldid=1383427" இலிருந்து மீள்விக்கப்பட்டது