பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டது என்பது கதை. இந்த வரலாறு எந்தப் புராணத்திலும் காணப் பெறாதது. வான்மீகி முனிவர் நான்முகன் வரத்தினால் பகவதவதார வரலாறுகளைத் தாமாகவே நேரில் கண்டது போலவே ஆழ்வார் பெருமக்களும் தாமாகவே கண்டவற்றில் இவ்வரலாறு ஒன்று என்பதாகக் கொள்வர் பெரியோர். பெரியவாச்சான் பிள்ளையும், இத்திருமொழியின் 6-ஆம் பாசுரத்தின் வியாக்கியானத்தில் இதைத் தெளிவாக அருளிச் செய்துள்ளமை காணத்தக்கது. இதிகாசம் - 3 : “மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கனையா உருவுருவே கொடுத்தான் (பெரியாழ். திரு. 4.8:1) என்ற திருமொழிப் பாசுரத்தின் உரையில் வருவது: கண்ணபிரான் கம்சனைக் கொன்று உக்கிரசேனனுக்கு முடி சூட்டிய பின்பு, அவந்தி நகரிலிருந்த சாந்தீபினி என்ற அந்தணர் பக்கல் சகல சாத்திரங்களையும் கற்றான். குருதட்சினை கொடுக்கும்நிலையில் இருந்தான். கண்ணனுடைய ஆற்றல் சிறப்பை அறிந்தவராகையால் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு மேற்குக் கடல் பிரபாசத் தீர்த்தத் துறையில் நீராடும் போது மூழ்கி இறந்து போன தம் மகனைக் கொண்டு வந்து தரவேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். கண்ணபிரானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டு கடல் நீரில் வாழ்கின்ற பஞ்சஜனன் என்ற அசுரனே அவ் அந்தணச் சிறுவனைக் கொண்டு போயினன் என்பதை வருணனால் அறிந்து, கடலில் இறங்கி அவ்வசுரனைக் கொன்று அவன் உடலாகிய பாஞ்சசன்யத்தை எடுத்து வாயில் வைத்து முழக்கிக் கொண்டு யமபுரிக்கு எழுந்தருளி அங்கு 'யாதனையில் கிடந்த அந்தச் சிறுவனை அவன் இறந்தபோது கொண்டிருந்த உருவம் மாறாதபடி கொண்டு வந்து தட்சினையாகக் கொடுத்தான். "கடலில் மூழ்கிய குமாரனை மீட்கக் கொடுத்தருளியதுபோல், சம்சார {