பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்த பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி அழியா மரபின் வழிநூல் ஆகும்.” என்ற நூற்பாவின் அடிப்படையில் அமைந்திருப்பதால், சுவாமியில் தீபிகை சிறந்த வழிநூலாகத் திகழ்கின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவாக்கும் எ-டு-1 திருவாய் (6.10:10) உரைஅவதாரிகை கீழ்த்திருவாய்மொழில்(6.9) அபரிமிதமான ஆர்த்தி யோடே பரமபதத்தளவும் கேட்கும்படி, அஃதாவது, எனது ஆவி, உள்மீதாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ? (6,9:5) என்பதுபோல கூப்பிட்டார். ஆயினும் எம்பெருமான் வந்து முகம் காட்டவில்லை. இதனால் தளர்ந்து நோவுபட்ட ஆழ்வார், அப்பெருமான் சீவைகுந்தத்திலிருந்து நிலவுல கத்திற்கு வந்து இராமகிருஷ்ண அவதாரங்கள் பண்ணி அக்காலத்திலே இழந்தார்க்கும் இழக்க வேண்டாமல் திருவேங்கட மலையிலே நித்திய சூரிகளோடும், நித்திய சம் சாரிகளோடும், ஏனைய பிராணிகளோடும் வேறுபாடின்றி எல்லோரும் வந்து ஒன்று சேர்ந்து தரிசிக்கும்படி நித்திய சந்நிதி பண்ணியிருக்கும் நிலையை அநுசந்தித்து அத்திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய கதியற்ற நிலையை விண்ணப்பம் செய்து சரணம் புகுகின்றார் - இத்திருவாய்கொழியில். 3. நன்னூல - நூற்பா.7 4. இதனால முன் திருவாய்மொழி இயைபு காட்டியவாறு