பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சம்பிரதாய வைணவ மரபுகள் தீபிகையை ஆழ்ந்து நுணுகிக் கற்கும்போது வைண வத்திற்கே உரிய சில மரபுகளை அறிய முடிகின்றது. அவற்றை ஈண்டுக் குறிப்பிட்டுவோம். (1) சம்பிரதாயப் பெயர்கள் : வைணவ உரையில் சில பெரியோர்களின் இயற்பெயர்கள் சம்பிரதாயமாக மாறி வழங்கப்பெறும். அநுமன் சிறிய திருவடி என்றும், கருடன் பெரிய திருவடி என்றும், ஆதிசேடன் 'அனந்தாழ்வான்’ என்றும், இலக்குவன் 'இளைய பெருமாள்' என்றும், இராமன் பெருமாள்' என்றும், வீடணன் விபீடணாழ்வான்' என்றும், சுக்கிரீவன் மகராசர்" என்றும், சடாயு பெரிய உடையார் என்றும், திருமலை திருமலை ஆழ்வார்' என்றும் ஆழ்வார் திருநகரியின் திருக்கோயிலிலுள்ள புளியமரம் 'திருப்புளியாழ்வார்' என்றும், திருவரங்கநாதன் பெரிய பெருமாள் (தெலுங்கு "பெத்த பெருமாள்') என்றும், ஆளவந்தார் பெரிய முதலியார் என்றும் சம்பிரதாயப் பெயர்களுடன் வைணவர் களின் திருவுள்ளத்தில் இடம் பெற்றுள்ளன. இங்ங்னமே கூரத்தாழ்வான் ஆழ்வான்' என்றும், கிடாம்பி ஆச்சான் ஆச்சான்' என்றும், திருக்குருகைப்பிரான் பிள்ளான் 'பிள்ளான் என்றும், குருகைக் காவலப்பன் அப்பன்' என்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆச்சான் பிள்ளை' என்றும், முதலியாண்டான் ஆண்டான் என்றும் சுருக்கமான பெயர்களால் வழங்கப்பெறுவர். (2) எம்பெருமானின் திருக்கழல்கள் : வைணவத் திருத்தலங்களில் திருவரங்கம் கோயில்’ என்றும்,