பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 27 முப்பது நாட்கள் சென்னைக்குச் சென்றிருந்தாலும் போகியன்று சொற்பொழிவுகளைக் காலையிலேயே சாற்று முறையாக நிறைவு செய்து விட்டு மாலை புறப்பாட்டிற்குக் காஞ்சி திரும்பிவிடுவார். அகவைக் கேற்ற தளர்ச்சி ஏற்பட்ட போதிலும் கூட குழுச்சேவையைத் தவிர்த்ததில்லை. திருநாட்டிற்கு எழுந்தருளுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த பிரம்மோத்சவத்திற்குக்கூட ஒரு நாள் கூட தவறாமல் குழுச் சேவைக்குத் தொடக்கத்திலேயே எழுந்தருளி விடுவார். அருளிச் செயல் கைங்களியத்தில் அளவிறந்த ஈடுபாடுடைய மற்றொருவரை இப்பூவுலகில் காண்டல் அரிது. (11) அஞ்சாமையும் துணிவும் சுவாமியின் பிறவிப் பேறுகள். சுவாமிகள் தாம் கொண்ட சமய தத்துவக் கொள்கைகளில் ஊற்றம் மிக்கவராதலால் அவற்றை மறுத்து அல்லது எதிர்த்துச் சொல்பவர் எவராயினும் நேரிலேயே கண்டிக்கவும் தயங்கியதில்லை. காஞ்சி காம கோடி பீடம் திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்தியபோது - "எங்கள் திருப்பாவையும் உங்கள் திருவெம்பாவையும் ஒன்றாகி விடுமா? நாங்கள் நாடோறும் கோயில்களிலும் எங்கள் குடில்களிலும் திருப்பாவை அநுசந்தானம் செயகின்றோம். அங்ங்னம் திருவெம்பாவையை உங்கள் மடத்திலாவது அநுசந்திப்பீர்களா?" என்று சங்கராசாரியரிடமே நேரில் கேட்டு விட்டனர். அங்ங்னமே எவரேனும் ஆட்சேபகரமான விஷயம் எழுதி வெளியிட்டால், அதன் மைஉலர்வதற்குமுன் சுவாமி கண்டனக் கட்டுரை அவர்கட்கே கிடைத்துவிடும்படி செய்து விடுவார். (12) திருநாட்கள் : வையம் கண்ட வைகாசித் திருநாளும் (தேவப் பெருமாள் பிரம்மோத்சவம்) பங்குனி விசாகத் திருநாளும் (சுவாமி அவதரித்தது பங்குனி விசாகத்தில்) மிக மிக முக்கியமானவை. முன்னதில் நாலாதிசைகளிலிருந்தும் அதனைக் கண்ணுற வரும்