பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 33 உடனிருந்து பணியாற்ற தக்க சீடர்கள் ஒருவரும் இல்லையே. அய்யர்வாள் நூல்கள் அமைந்திருப்பன போல் தங்கள் திவ்வியார்த்த தீபிகை முதல் அனைத்து நூல்களும் அமையவில்லையே. தாங்கள் மட்டிலும் தனியாக இருந்து அனைத்தையும் செய்யவேண்டியிருந்ததால் தங்கள் நூல்களில் அச்சுப்பிழைகள் அதிகமாகக் காணப் பெறுகின்றன. சம்பிரதாயப் பெயர்கள், வைணவ மரபுச் சொற்கள், வடமொழி தற்சமச் சொற்கள் ஆகியவற்றில் பிழைகள் நேரிட்டால் தொடக்ககாலப் படிப்பாளர்கள் சரியாகத் திருத்திப் படித்துக் கொள்ள முடியாதல்லவா? அடியேன் தங்கள் நூல்கலைப் பயிலும்போது திருப்பதியில் வடமொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றிய திரு வேங்கட ராகவாசாரியர் (தமிழை நன்குகற்ற வடமொழிப் பேராசிரியர்) அருகில் இருந்தபடியால் பிழைகளைத் திருத்திக் கொண்டும் வடமொழித் தொடர்களின் பொருள்களை செவ்வனே அறிந்து கொண்டும் கற்க முடிந்தது. தங்கட்கு அருகிலிருந்து பணியாற்றக் கூடிய சீடர்கள் இல்லையே” என்று வருத்தத்துடன் தெரிவித்தேன். சுவாமி உரைத்த மறுமொழி: "ரெட்டியார்வாள், தாங்கள் நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு வைணவ நூல்களை ஆழ்ந்து கற்கின்றீர்கள். 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - நம்மாழ்வார் சமயம் தத்துவம்' என்ற பொருளில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளீர்கள். சைவத்தில் ஏராளமான பொருள்களிருந்தும் அவற்றில் ஒன்றைக் கூடத் தேர்ந் தெடுத்துக் கொள்ளாமல் வைணவ சமய தத்துவத்தை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். இது எனக்குச் சற்று வியப்பாகவே உள்ளது" என்றார். அடியேன் உரைத்த மறுமொழி: சிறுவயதில் படித்தபோது இராமாநுசர் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர்தம் பரந்த நோக்கம் - சாதி சமய நெறிகளையெல்லாம்