பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் கடந்த பெருமனநிலை-என் உள்ளத்தைப் பிணித்தது. ஏழுமலையான் திருவருளால் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி அவன் அருளால் தமிழக மானியம் பெற்று தமிழ்த்துறையை வளர்த்து எம்.ஏ., எம்.பில், பி.எச்.டி. முதலான பட்டங்கள் பெறும் நிலைக்கு உயர்த்தினேன். ஒரு சமயம் தேவரீரைப் போல என்னை ஆட்கொண்ட சுவாமி சித்பவாநந்தரிடம் (அத்வைதி) உரையாடிக் கொண்டிருந்த பொழுது என் ஆய்வுத் தலைப்பை அவரிடம் உரைத்தேன். அவரும் மிகவும் மகிழ்ந்து, வைணவம் ஓர் உயர்ந்த சமயம் - எல்லோரும் ஏற்கக் கூடிய (Cosmopolitary) சமயம். அதனை நிறுவிய இராமாநுசர் பரந்த விரிந்த போக்கை உடையவர். ஆதலால் அதனை ஆய்வது எனக்கும் மகிழ்ச்சியே. நன்கு செயற்படுக, வாழ்க" என்ற வாழ்த்தினார். அதனால் அதனயே உறுதியாகப் பற்றிக்கொண்டு ஆய்ந்தேன். இதனால் தேவரீர் தொடர்பும் ஆசியும் பெறுவதற்கு வாய்ப்பு அளித்தான் ஏழுமலையான்"என்று பணிந்து உரைத்தேன். மேலும் தங்கட்குப் பிறகு தங்கள் நூல்களைப் பாதுகாத்து வெளியிட குத்துவிளக்கு போன்ற ஒரு நற்சீடர் இல்லையே. தேவரீர்போன்ற சோதிக்குப் பிறகு 'இருள்நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன் என்றேன். சுவாமிகள் தொடர்ந்து உரைத்தது: "நீர் சொன்னதை உணர்கின்றேன். என்ன செய்வது? தேவப் பெருமாள் சேவைக்கு இளைஞர் சிலர் வருவார்கள்; நானும் அப்போது இருப்பேன். அவர்கட்கு ஏதாவது சொல்லி ஞானம் ஊட்ட நினைப்பதுண்டு. எம்பெருமானைச் சேவிப்பார்கள். பிரசாதம் பெற்றுக் கொள்வார்கள். ஏதாவது அவர்களிடம் சொல்லலாம் என்று திரும்புவேன். ஏதாவது சொல்லி வற்புறுத்தக் கூடும் என்று கருதி மாயமாய் மின்னல்போல் மறைந்து விடுவார்கள்” என்று தாமும் வருந்தி உரைப்பார்.