பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மறைந்தும் - மறையாத சோதி நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்.அது உணர்வார் பெறின் (334)" மனிதன் நுகர்வினையின்படி (பிராரப்தம்) பிறக்கின்றான். நுகர்வினை அநுபவித்து முடிந்ததும் இப்பூவுலகை விட்டுப் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நம் சுவாமியும் இதற்கு விதிவிலக்கு அல்லர். சுவாமியின் திருமேனியில் தளர்ச்சி ஏற்படுகின்றது. தளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தாம் செய்யும் கைங்கரியங் களை இனிச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற ஆற்றாமை அதிகமாகின்றது. கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்ற நிலையில் ஏங்கி இருந்தார் சுவாமி. 21-6-1983 அன்று காலை திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது சுவாமிக்கு. அன்று வடக்குத் திருவீதிப் பிள்ளை சாற்று மறை.’ அதனை விரைவாக நிறைவு செய்து வருமாறு தம் சுவீகாரபுத்திரனான செல்வமணியிடம் பணித்தார். அன்றைக்கு ஆனி (பெரியாழ்வார்சாற்று மறை) 'கருடன் எத்தனை மணிக்குப் புறப்பாடு? என்றும் கேட்டார். 1964 முதல் சுவாமி தாம் நிர்மாணித்தருளிய பாடசாலையிலேயே 1. திருக்குறள் - நிலையாமை 4 2. திருவாய். 6.9:9 3. நூலில் பிள்ளை, முதல் என்று குறிப்பிடுவ தெல்லாம் பிள்ளை சாதிப்பிரிவுகளைப்பற்றியதல்ல. அவையாவும் பார்ப்பண வைணவர்களையே குறிக்கும்.