பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சுவாமிகளின் தமிழ்ப் புலமை பெரும்பாலும் வடமொழிப் புலமை மிக்கவர்கட்குத் தமிழறிவும் தமிழ்ப் புலமை மிக்கவர்கட்கு வடமொழியறிவும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்புதான். அதிலும் சில வடமொழிப் புலவர்கள் தமிழ் பேசினால் சகிக்காது. இதனால்தான் நகைச்சுவைக்கு எடுத்துக் காட்டாக 'ஆரியர் கூறும் தமிழும் கூறப் பெற்றுள்ளது. நம் சுவாமிகள் அத்திபூத்த மாதிரி இரண்டு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றுத் திகழ்ந்தவர். தமிழில் கவிபாடும் திறமையும் பெற்றிருந்தவர். தமிழின் உயிர் நாடியைக் கண்டவர். எடுத்துக்காட்டு ஒன்றால் இது தெளிவாகும். 'குவலயங் கண்ணி கொல்லியம் பாவை (பெரிதிரு. 2.7:1) என்ற திருவிடஎந்தைபற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள 'கொல்லியம் பாவை' என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: 'வல்வில் ஓரி' என்ற சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லி என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவையாகும். இது தேவ சிற்பிபோல் அமைக்கப்பெற்ற அழகிற் சிறந்த பதுமையாகும். அம்மலையிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் இப்பதுமையின் சிரிப்பைக் கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திரமடல்). அசுரரும் 1. இது சேலம் மாவட்டம் - திருச்சி மாவட்டங்களில் (சேந்தமங்கலம் - துறையூர்) அருகில் பரவியுள்ள கொல்லிமலை என்று கருத இடம் தருகின்றது.