பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவாமிகளின் தமிழ்ப் புலமை 69 ஆனாய்' என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி, "தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபால மதயானாய்" என்று திருநெடுந்தாண்டகத்திலும் (10) அருளிச் செய்வர். "என்னானை, என்னப்பன், எம்பெருமான்" என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில். (iii) என் தந்தை' என்பது (பெரிதிரு. 1.1:6) 'எந்தை' என மருவிற்று. வாழ்நாள்' என்பது வாணாள் என மருவிற்று. 'கொள்ள என்பது கொள' எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள - அச்சங் கொள்ள என்றாயிற்று. பாடாவருவேன் (பெரி.திரு. 4.7:5) - உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. பாடா - செய்யா என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம், இப்படிப்பல. (iv) தொழுதாடித் தூமணி, வண்ணனுக்கு ஆட்செய்த (திருவாய், 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ஆட்செய்த நோய் தீர்ந்து' என்று தொடர் அமைந்திருப்பினும் உருபு பிரித்துக் கூட்டுதல் என்ற முறைமையின்கீழ் நோய் தீர்ந்து ஆட்செய்த என்று பொருள் கொள்ளத்தகும். 'ஆட்செய்த என்று உருபு பிரித்துக் கூட்டியதால் சொல் திரிந்து பொருள் திரியா வினைக்குறை (நன்னூல்-346) என்ற நன்னூல் நூற்பாவிற்கு ஏற்ப செய்து என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு செய்ய என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ளவரையில் தொடருமது. ஆகையால் நோய் தீர்ந்த' என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட்சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.