பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் திருத்தினார். (சாஸ்த்ரார்த்த சந்த்ரிகை, மலர் மூன்று 1951). தீர்மானித்தல், தயாரித்தல் போன்ற சொற்களைக் கையாண்டு எழுதுவதையும் சுவாமி கண்டித்துள்ளார். (ix) சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஒசையின்பம் சிறக்கும் என்பது சுவாமியின் கருத்து. இவ்வாய்வு வுரை, வீற்று இருக்கும், நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப்பிரிவுகளைக் கண்டு சுவாமியின் திருவுள்ளம் புண்பட்டதுண்டு. (x) லட்சித லட்சணை என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30) கேசியை வதம் செய்த கண்ணபிரானைக் குறிப்பாக 'கூந்தல் எரிசினம் கொன்றோய்' என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் "கேசி - குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப்பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார். முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் கூந்தல் வாய் கீண்டானை' (இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் சுவாமியின் குறிப்பு : "தலைமயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ங்னமே என்னில், கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் கேசம் என்பதாகும். அச்சொல் கேசியை நினைப்பூட்டும்" என்பதாகும். திருமங்கை மன்னனும், தம் திருமொழியில், புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட்கண் வந்த பூதனை புள்ளுருவாகி வரவில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்.