பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

காஞ்சி வாழ்க்கை


 காஞ்சியிலே எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது, ஒரு முறை எனது அன்னேயார் எங்களைக் காணவந்து எங்களோடு தங்கி இருந்தார்கள். எதிர் பாராதபடி அவர்கட்கு உடல் நோய் உண்டாயிற்று. நோயின் வெம்மைமிக, ஒரு எல்லையில் அவர்கள் உயிர் பிரியும் நிலையும் வந்துற்றது. பிறகு சற்றே தெளிவும் பெற் றனர். அந்த வேளையில் அவர்கள் பேசினர்கள். எப்படியும் தனது முதல் மருமகளைக் காணவேண்டும் எனவும் தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுவது எனது கடமை எனவும் கூறினர்கள். நான் செய்வதறியாது திகைத் தேன். எத்தனையோ ஆண்டுகள் கழித்து, மறுபடி எப்படி அவர்கள் வீட்டிற்குச் சென்று அழைப்பது என எண்ண மிட்டேன். இதிலெல்லாம் காளப்பர் முன்னின்று செயலாற்ற வல்லவர். பிரிந்தாரைக் கூட்டிவைப்பதிலும் மாற்ருரை மாற்றுவதிலும் வல்லவர். அவர் உடனே என்னை அழைத் துக்கொண்டு அங்கம்பாக்கம் புறப்பட்டார். நாங்கள் இரு வரும் அவர்கள் வீட்டில் போய் மூன்று மணிநேரம் வாதாடி ளுேம். அவர்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் வைததை இன்று நினைத்தாலும் குலேநடுங்குகிறது. அவர் களே வணங்கி வேண்டினேன். என் அன்னையார் இறுதி ஆசையை நிறைவேற்றிவைக்க வேண்டுமென முறையிட் டேன். எத்தனையோ கட்டுபாடுகள் விதித்து என்னுடன் என் மனைவி என்பாரை அனுப்பிவைத்தனர். காஞ்சிபுரம் வந்து சேர்ந்து, என் அன்னமுன் நிறுத்தினேன். அன்னே யார் கண்ணிர் வடித்தார்கள். பிறகு இரு மருமக்களையும் ஒரு சேரக் கண்ட மகிழ்ச்சியோ என்னமோ அவர்கள் நன்கு தெளிவு பெற்ருர்கள். பிறகு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, எனக்கு மேலும் வழிகாட்டியாக இருந்த பிறகே அவர்கள் காஞ்சியிலேயே மறைந்தார்கள். வந்தவளே இருந்தவள். நன்கு வரவேற்ருள். இருவருக் கும் எங்கே பூசல் கிளம்புமோ என அஞ்சிய எனக்கு அவர் கள் பழகிய பழக்கம் மன ஆறுதலாக இருந்தது. எனினும்