பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

காஞ்சி வாழ்க்கை



அண்மையில் அவன் மணம் முடிந்த பிறகு இருவரும் வெண்காடு சென்று வணங்கி வந்தனர். அதே வேளையில் எனது ஊரில் என் முன்னோர்கள் ஏற்பாடு செய்த அறக்கட்டளைகளெல்லாம் செம்மையுற நடைபெறுகின்றதா எனக் கண்டு வரவும் எனது ஊர் நிலங்களின் விளைவு பற்றி அறிந்து வரவும் அடிக்கடி அங்கம்பாக்கம் செல்வேன். ஊரில் முன்னிருந்த பல பெரியவர்கள் மறைய மறைய புதிதாக வருபவர்கள் ஊரின் ஒற்றுமையிலும் வளர்ச்சியிலும் அவ்வளவு அதிகமாகக் கருத்திருத்தாமையின் ஊர் வளம் குன்றத் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் எல்லா வகையிலும் சிறந்திருந்த எங்கள் ஊர், எல்லாவற்றிலும் நிலை குலையத் தொடங்கிய தன்மையை நினைத்து வருந்தினேன். சில சமயங்களில் ஊரில் உள்ள பெரியவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து எப்படியும் ஊரை வளம் பெறச் செய்ய முயல்வேன். பல சமயக் கூட்டங்களுக்கும் கோயில் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்வேன். என்றாலும் அவற்றாலெல்லாம் பயன் விளையக் காணவில்லை. அடுத்த நெய்க்குப்பம் கிராமத்திலும் எனக்கு நிலபுலன்கள் இருந்தமையின் அதையும் வளமாக்க முயன்றேன். அதற்குள் நெல் விலை உயர உயர மக்களிடம் பயிரிட ஆர்வம் பெருகுமென எதிர்ப்பார்த்தேன். 'நெய்க்குப் பத்தில் அந்த ஆர்வம் ஒருவாறு இருந்தது என்றாலும் அங்கம்பாக்கத்த்தில் அவ்வளவாக இல்லை. இருப்பினும் எப்படியாயினும் தாழ்ந்த கிராமங்களை தலைநிமிர்த்த முயன்றேன்; முடியவில்லை.

இடையில் மற்றொரு ஏற்பாடும் நடைபெற்றது. எங்களூர் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. அடுத்த வடகரையில் சாலையும் இரெயில் பாதையும். உண்டு; அதை அடுத்துச் சுமார் 20 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் பாதி சமுதாய நிலம்; பாதி அரசாங்கத்துடையது. அவற்றைப் பெற்றால் அங்கே மறைந்த என் அன்னையின் பேரால்