பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

காஞ்சி வாழ்க்கை


நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்கக் கேட்க என் உள்ளம் நைந்தது.

எனது மண இதழைக் கொண்டுசென்று என் அன்னையிடம் நண்பர் தந்து விளக்கியதும் அன்னையார் 'ஓ’ வெனக் கதறி அழுதனர். வீடே 'பிண' வீடாக மாறிய நிலையில் இருந்தது. யாவரும் வந்து விசாரித்தனர். எனது. பெரிய அன்னையும் பெரிய தந்தையும் எவ்வளவோ கூறியும் மற்றவர்கள் தேற்றியும் என் அன்னையார் அமைதியுறவில்லை. பலர் 'சிவானந்தம்' (அப்படித்தான் என்னை ஊரில் உள்ளவர்கள் அழைப்பார்கள்) அவ்வளவு துணிச்சலாகச் செய்யமாட்டான். ஏதோ இருக்கும் என்று கூறத் தேற்றியும் அன்னையார் கேட்கவில்லை. உடனே 'குணமங்கலத்'துக்குப் புறப்பட்டுச் சென்று மணத்தைத் தடுக்கவேண்டும் என்று வாதடினர். என்னை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், அவர்கள் தம் குலத்திலேயே-மரபிலேயே எனக்குப் பெண்தேடவே நினைத்தனர். நான் வேற்றுச் சாதியிலே வேறுபெண்ணை மணப்பது என்பது அவர்களோ மற்றுள்ள ஊரார்களோ விரும்பாதது. அவ்வளவு வைதீக எல்லே மீறாக மக்கள் வாழ்ந்தது என் ஊர். எனவே எல்லோரும் இதுபற்றிக் கலந்து ஆலோசித்தனர். நான் கற்பனையில் குறித்த அந்த ஊர் எங்குள்ளது எனத் தேட முயன்றனர். இருவர் வாலாஜாபாத் புறுப்பட்டுவந்து, ரெயிலடியில் வந்து, அந்நிலையத்துள்ளாரை அவ்வூரைப் பற்றிக் கேட்டனர், அவர்கள் எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்ந்து அதுபோன்ற ஊர் எதுவும் ரெயில் எல்லையில் நிலையமாகக் கிடையாது என்று கூறிவிட்டனர், வேறு சிலர் அஞ்சல் நிலையம் சென்று ஆராய்ந்தனர் போலும். அங்கே உள்ள எல்லா ஊர்களையும் ஆராய்ந்து, குணமங்கலம் என்ற சிற்றூர் தஞ்சை மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பதாகக் கண்டனர். உடனே ஊருக்கு வந்து அன்னையாருக்கு அத்தகவலைச் சொன்னதுதான் தாமதம், உடனே அந்த ஊருக்குப் புறப்படவேண்டுமென்று கிளம்பி