பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

69



விழா அன்று ஊரே அலங்கரிக்கப்பெற்றது. அந்த நாட்களில் ஊரில் ஒருவர் வீட்டில் சிறப்பு என்றால் ஊரார் அனைவரும் தத்தம் சிறப்பெனவே க்ருதி எல்லாப் பணிகளையும் விரும்பிச் செய்வர். அப்படியே அவர்கள் அனைவ்ரும் சிறப்பாளர் வீட்டில் வேறுபாடில்லாது கலந்து உண்பர். இன்று முன்விடும் பின் வீடும் பிணங்கும் நாகரிகத்தில் வாழும் நமக்கு இவையெல்லாம் புரியாதன. மண்ட்பத் திறப்பு விழாவிற்கு வெளியிலிருந்தெல்லாம் பல பெருமக்கள் வந்திருந்தனர். 'திரு. வி. க. வருகிறார் என அறித்து பல அன்பரும் அறிஞரும் கூடினர். அன்று ஒரு மணவிழாவினை ஒத்த சிறப்பு ஊரில் நடைபெற்றது. வாலாஜாபாத் பள்ளியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சாரணர் உடையுடன் வந்து சிறக்கக் தொண்டாற்றினர். பின் இறைவன் திருவுலாவின் போது சாலை இருமருங்கிலும், வரிசையாக அணி வகுத்து அவர்கள் சென்ற காட்சி சிறந்தது. இவ்வாறு அம்மண்டப விழா சனவரி இறுதியில்-தையில் இனிது நிறைவேறிற்று.

அடுத்த மார்ச் அல்லது ஏப்ரலில் நான் வித்துவான் தேர்வு எழுத என்னை ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். குடும்பச் சூழலின் காரணத்தாலும் 'மேலே காட்டிய பல மாறுபாடுகளாலும்' பெரிய தந்தையார் பிரிவாலும் மண்டபப் பணியாலும் நான் நன்கு படிக்கவே இல்லை எனலாம். எனினும் தேர்வு நாற்பது ஐம்பது நாட்களில் உள்ளமையின் எப்படியும் படித்து வெற்றிபெற வேண்டுமென்று விரும்பினேன். எனது அன்னையர் இருவரும் அவ்வாறு செய்யலாம் என்றும் ஆனால் பிறகு எங்கும் வேலைக்குச் செல்லக் "கூடாது என்றும் விரும்பினர். நானும் எப்படியாவது முடித்தால் போதும் என்ற உணர்வில் 'இசைந்தேன். உடனே ஒரு திங்கள் தில்லை அண்ணாமலை நகரில் தங்கினால் எனது பழைய ஆசிரியர்களிடமும் பழகிய நண்பர்களிடமும் சில புரியாத பாடங்களைக் கேட்டுக்கொள்ள முடியும் என்று நம்பி அதையும் அன்னயாருடன் கலந்தேன். இருவரும் முதலில்