பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி வாக்கு


மிழ் நாடு தூங்கிக்கொண்டிருந்தது. கும்பகர்ணனைப்போல ஒரே தூக்கம். தூக்கத்தோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்துகொண்டது. விழித்துப் பார்த்தவர்கள்கூட நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோர்ந்து கிடந்தார்கள். அந்தச் சமயத்திலே பாரதியார் வந்தார். “தமிழா எழுந்து நில், உன்னுடைய அறிவு, உன்னுடைய மொழி, உன்னுடைய கலைகள்—இவற்றைப் போல உலகத்திலே எங்கும் கிடையாது” என்று தமது கவிதைக் குரலிலே முழங்கினார்.

கவிதைக்கு ஒரு அற்புதமான மந்திர சக்தியிருக்கிறது. அதன் உண்மைக் குரலைக் கேட்டவுடனே தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ அவர்களுக்கு ஆச்சரியமான சக்தி பிறந்துவிட்டது. நாட்டிலே ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிக்க அவர்கள் முனைந்துவிட்டார்கள்.

தமிழின் மறுமலர்ச்சிக்கும் தமிழர்களின் விழிப்புக்கும் முக்கிய காரணமாக யாராவது ஒருவரைச் சொல்ல வேண்டுமானல் அவர் பாரதியார்தான்.

எத்தனையோ அரசியல் தலைவர்கள், தியாகிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இப்பணியிலே பங்கு கொண்டிருக்கிருர்கள். ஆனால், நிலைத்த தனிச்-

7