பாரதி வாக்கு 107
லோகோபகாரம் செய்யவேண்டும் என்பதையும் அதல்ை சிறந்த பயனுண்டு என்பதையும் பாரதியார் எடுத்துக் காட்டியிருக்கிருர், லோகோபகாரத் தையே பரிபூரணமாகச் செய்வோன் மனித நிலை கடந்து அமர நிலை பெறுவான் என்கிருர் அவர்.
தெய்வம் உண்டு. நலம் செய்வோன் எவனும் கெட்ட வழி சேரமாட்டான் என்று கீதை சொல்லு கிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவ னுடைய யோக rேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனால், ஆரம் பத்திலே சோதனைகள் நேரிடும். மனந்தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனல் பிறகு, சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும். லோகோபகாரத்தின் ஆரம்பத்தில் மனத்தளர்ச்சி ஏற்படுவது சகஜம். -
"ஏதடா இது, தெய்வத்தை நம்பி, தெய்வம் கர்த்தா, நாம் கருவியென்று நிச்சயித்து மற்றவர் களுக்கு நன்மை செய்யப்போன இடத்தில் நமக்குத் தீமை உண்டாகிறதே, கிணறு வெட்டப்போன இடத்தில் பூதம் புறப்படுகிறதே, உலகத்தைக் கிளி என்று நினைத்து அதன் பசி தீரப் பால் வார்க்கும்படி போனல் அது கழுகாக மாறி நம்மைக் கொத்து கிறதே என்று திகைத்துப்போய் மனிதன் லோகோப காரத்தைக் கைவிடக் கருதுதல் சாமான்யம். இது தவறு. தெய்வம் நமக்குத் தகுதி ஏறும் பொருட் டாக நம்மைச் சோதனை செய்கிறது. உள்ளம் பதருதிருந்தால் விரைவில் வானந் தெளியும்.”
பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/109
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
