பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

காட்டு வழிதனிலே

கணிப்பது அறிவுடைமையல்ல. விஞ்ஞானம் பல கொடுமையான அழிக்கும் படைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அதனால் விஞ்ஞானத்தையே வேண்டாமெனத் தள்ளி விடலாமா? அவ்வாறு செய்ய நினைப்பது எப்படித் தவறாகுமோ அது போலவே மதத்தை விலக்க நினைப்பதும் தவறாகும். மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதிகளை நாம் களைந்தெறியலாம்; உறுதியுடன் களைந்தெறிய வேண்டும். பொற்சிலையிலே தூசு படிந்திருந்தால் தூசைத் துடைத்தெறிய வேண்டுமே ஒழியச் சிலையை உடைத்தெறியக் கூடாது.

உண்மை மதத்தினின்றும் வேறுபட்டிருக்கிற புறச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றில்தான் குறைபாடுகள் பெரிதும் இருக்கின்றன. அவைகளே வேற்றுமைக்கும் காரணம். ஒவ்வொரு மதத்திலும் பொதுவாக மூன்று படிகள் இருக்கக் காண்கிறோம். தத்துவம், புராணம், சடங்குகள் என்பன அவை. புராணமும் சடங்குகளும் சாதாரண மக்களுக்கு உண்மையை எளிய முறையில் விளக்கிக் காண்பிப்பதற்காக எழுந்தவை. அவைகளிலே பல அந்த அந்தக் காலத்திற்கேற்றவாறு உண்டாக்கப்பட்டவை. அவை எக்காலத்திற்கும் வேண்டப்பட்டவை யல்ல. ஆதலால் அவற்றிலே உள்ள குறைபாடுகளையும், பயனெழிந்தவைகளையும் களைந்து விட வேண்டும். மாறாத தத்துவங்களையும் மற்றவைகளையும் வேறு வேறாகப் பிரித்துணராமல் கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்ற முயல்வது கடவுகளுக்குத் துரோகம் செய்வதாகும். இறைவன் நமக்-