பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 காட்டு வழிதனிலே அவன் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலே எவ்வளவு பெரிய உண்மை பொதிந்து கிடக்கிறது! அது மேலும் என்னைச் சிந் தனையில் புகுத்திற்று. "ஆட்டுக்குட்டியின் வாழ்க்கை அமைதியாகத்தான் உள்ளது. ஆனால், அதிலே ஏதாவது மாறுதல் உண்டா? நூறு தலைமுறைக்குப் பிறகு பார்த்தாலும் அதே வாழ்வுதானே? இடையன் சொன்னதுபோல, ஒர் அற்ப விலங்கான நரியை எதிர்த்துப் போராடவாவது ஆடு கற்றுக்கொண் டிருக்கிறதா? மனிதன் எத்தனை அற்புதங்களைச் சாதித்திருக்கிருன்! அவனுக்கு இறகு இல்லை; இருந் தாலும் பறக்கிருன். இப்படி எத்தனை அருஞ் செயல்கள்! அவன் வாழ்க்கையிலே அமைதி இல்லை என்பது மெய்தான். ஒருவேளை இந்த அமைதி யின்மையே அவனுடைய பெருமைக்கும் முயற் சிக்கும் காரணம் போலும், அமைதி கிடைத்து விட்டால் பிறகு முயற்சி ஏது? அவனுக்குத் தனது இன்றைய நிலையிலே திருப்தி இல்லை. அதைத் திருத்தி ஒப்பற்றதாக அமைக்க விரும்புகிருன். அதற்காக விஞ்ஞானத்தையும் மற்றக் கலைகளையும் துருவித் துருவித் தேடி அலைகிருன். பல சமயங் களிலே தவறுகளும் செய்கிருன். இன்பத்திற்காக வளர்த்த கலைகளையே துன்பப் படைகளாகவும் ஆக்கிக்கொள்கிருன். இருந்தாலும், அவனுடைய குறிக்கோள் மிக உயர்ந்தது. அதை அடையும் வரையில் அவன் மன அமைதி பெறமாட்டான். உலகமெல்லாம் ஒரு வீடு என்றும், மக்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தார் என்றும், அனைவ.