பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறுபண்ணுற்றுப் படை 33 வறுமையால் வாடிப் பரிசில் பெறக் கருதிய ஒருவனைப் பரிசில் பெற்று வந்த வேருெருவன் தனக்கு அதை யளித்த வள்ளலிடம் செல்லுமாறு அவ்வள்ளலின் புகழையும் கொடை வளத்தையும் எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்துகிருன். பத்துப் பாட்டு என்ற சங்க இலக்கியத் தொகை நூல்களிலே ஐந்து ஆற்றுப்படைகள் சேர்க்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சிறுபாணுற்றுப்படை. இது ஒய்மானுட்டு நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர் பாடியது. யாழ்ப்பானர்கள் பெரும்பானரென்றும் சிறுபாண ரென்றும் இருவகைப்படுவார்கள். அவர்களில் சிறுபாணன் ஒருவன ஆற்றுப் படுத்தியதால் இந் நூலுக்கு இப் பெயர் வந்தது போலும். ஆசிரியப் பாவால் இயற்றப்பட்டு முன்னுாற்றுக்கும் குறைந்த அடிகளை உடையதால், அடிகளின் சிறுமை பற்றி இப் பெயர் வந்ததென்றும் கூறுவர். - வள்ளன்மை மிக்க தலைவன் ஒருவனது உயர்வு தோன்றப் பாடுவதற்கு ஆற்றுப்படை என்னும் நூல்வகை சிறந்த சாதனமாக இருக்கின்றது. இதிலே அத்தலைவனை நேர்முகமாகப் புகழாது பிற ைெருவனுக்குக் கூறு முகத்தாலே புகழுவது சாலச் சுவை பொருந்தியிருக்கிறது. அவ்வாறு புகழ்ந்து பேசுவதுதான் உயர்ந்த புகழ்ச்சியாகும். சிறுபாணுற்றுப்படையில் விரிந்துள்ள செய்தியை இனி ஆராய்வோம். ஆற்ருெளு வறுமையில் ஆழ்ந்த பாணளுெருவன் ஒய்மானுட்டு நல்லியக் கோடனிடம் சென்று யானையும் தேரும் மற்றப்