பக்கம்:காதலர் கண்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) காதலர் கண்கள் 59 மதா. தா. ஜெ. தா. தா. அதோ துளசிபாய் கோபித்துக்கொண்டு போகிருள், நீ. விரைந்து சென்று சமாதானப்படுத்தி உன்னை மணஞ் செய்து கொள்ளும்படி செய், போ உடனே. ஆமாம். அத்தெயாவது கேட்கிறேன். (போகிருன்.) தாராபாய் ! சற்று முன்பாக நான் மகா பாதக மொன்று செய்தவன் என்று கூறினேனே, தெரிகின்றதா இப்பொழுது அது இன்னதென்று ? தெரிகின்றது.-அப்பொழுதே நான் சந்தேகித்தேன். கண்ணே, என் முன்னேர்கள் உன் வம்சத்தாருக்கிழைத்த தீங்குகளை யெல்லாம் மன்னித்து, என்னைக் கடைத்தேறச் செய்யமாட்டாயா? பிராணகாதா-அப்பொழுதே அதையெல்லாம் மறந்துவிட் டேன். எப்பொழுதே ! உம்மீது காதல் கொண்ட பொழுதே பிராணகாதா, அதிருக் கட்டும் இப்பொழுது இந்தத் துளசிபாய்போய் ஏதாவது கலகஞ் செய்துவிடப் போகிருள். மஹாராஜாவுக்கு இந்தச் சங்கதி யெட்டுமுன் நாம் அவர் முன்பு போய் ஏதாவது யுக்தி செய்து அவர் அனுமதியைப் பெறவேண்டும். என்ன சொல்லு கிறீர்? ஆம், கண்ணே. அது ஒரு பெரிய கஷ்டமிருக்கின்றது. நீடித்து நமக்கிருந்த ஜன்மத் துவேஷத்தை நீ மறந்து மன்னித்ததுபோல் அவர் அவ் வயதில் அவ்வளவு சீக்கிரமாக மறத்தல் அசாத்திய மாயிற்றே ! - வாரும் போவோம் அவரிடம். இவ்வளவு நமக்கு அநுகூலஞ் செய்த இறைவன் இதிலும் நமக்கு வழிகாட்டுவார். தெய்வமே கதி யென்று போவோம் மஹாராஜாவிடம். வாரும் நீரும், இருவரும் போகிருச்கள்.) காட்சி முடிகிறது. “eco-romotor

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/64&oldid=787489" இலிருந்து மீள்விக்கப்பட்டது