பக்கம்:காதலா கடமையா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 35



(“நன்மொழி சொல்லடி நங்கையே என்றால்
பொன்மொழி ஒன்றுபுகலினும் புகல்வாள்”)


இடம்
கொன்றை நாட்டு
அரண்மனை.
உறுப்பினர்
மாழைப் பேரரசு.


கிள்ளை என்னைக் கேடன்என் றெண்ணி
எள்ளுவாள்; ஏசுவாள் இன்னலுற்றாள்.
அன்னாள் அன்பினை அடைய எண்ணும் நான்,
இன்னல் இழைத்தேன், என்னே மடமை!
தங்கவேல் கொடுமை தாங்கிய மக்களை
அங்குக் கண்டான். அவன் உயிர் நீக்கினான்.
ஏனையோரும் இறந்து படுவரோ.
மாநிலம் பழிக்குமே மன்னன் என்னை.
விடியுமுன் என்ன விளையுமோ, கிள்ளை
பொடிப்பட்டு நெஞ்சுபொறாது மாய்வாளோ
மங்கை கிள்ளைக்கு மகிழ்ச்சியை விளைத்துத்
திங்கள் முகத்தில் சிரிப்பை விளைத்து
நன்மொழி சொல்லடி நங்கையே என்றால்
பொன்மொழி ஒன்று புகலினும் புகல்வாள்,

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/100&oldid=1484465" இலிருந்து மீள்விக்கப்பட்டது