பக்கம்:காதலா கடமையா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

ஆதலின்,
எழுதிய விடுதலை ஏட்டை நானே
முழுநிலா மறையும் முன்னரே சென்று
அவள்பால் நல்குவேன். அங்குநான் சென்றால்
தவறு விளையுமோ. சட்டை மாற்றி
முகத்தடை யாளம் முழுதும் மாற்றித்
தகும்என் அமைச்சனின் தளர்உரு எய்திச்
செல்வேன் என்று மன்னன்
நல்லதோர் திட்டம் நண்ணினான் ஆங்கே.

 

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/101&oldid=1483532" இலிருந்து மீள்விக்கப்பட்டது