பக்கம்:காதலா கடமையா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 36



(“கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக்
கொலைக்கருவி நான் கொண்டதை அறியாள்”)


இடம்
கொன்றை நாட்டின்
முன்னாள் அரண்மனை.
உறுப்பினர்
மகிணன், கிள்ளை,
மாழைப் பேரரசு.


"உளக்கோ யிலிலே உற்ற சுடர்மணி
விளக்கவிக்க வாளொடு விரைந்து செல்கின்றேன்”
என்று தன்னை இகழ்ந்தா னாகி
அரண்மனை எதிரில் அணுகினான் மகிணன்.

இருண்டடர் கூந்தல் ஏந்திழை இப்போது
துயின்றிருப்பாளா? துயரிலே நெஞ்சு
பயின்றிருப்பாளா? பற்பலர் அவளிடம்
சூழ்ந்திருப்பாரா? தூக்கத்திலே அவர்
ஆழ்ந்திருப்பாரா? அறியேன்! என்று
மகிணன், அரண்மனை வாயிலை மிதித்தான்.
கலைத்தால் மற்றொன்று காணரும் ஓவியம்
நிலைத்தால் இந்த நீணிலப் புதுமை

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/102&oldid=1484388" இலிருந்து மீள்விக்கப்பட்டது