பக்கம்:காதலா கடமையா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலர்க்குப் புதிய பாடம் அவள் என்று
காவல் வாயிலைக் கடந்து சென்றான்.
விட்டுவிட்டன்றி விடாது மின்னுமோர்
கட்டழகு தன்னை வெட்டவும் வேண்டுமே.
பொலிவிருக்கும் புதுப்பூ என்று
கொலுவிருக்கும் கூடம் கடந்தான்.
பெண்ணழ கொன்று பேர்சொல இருந்ததென்று
மண்ணும் இரங்குமே, மக்கள் கூட்டம்
நிலா இருந்தது நீணில மதிலும்
இலா தொழிந்ததே என்றும் இரங்குமே
நாடிரங்குமே நகர் இரங்கு மேஎன்
றாடரங்கு முதல் அனைத்தும் கடந்தான்.
அணிவிளக் கெரியும் அறையின் நாற்புறம்
பணிப்பெண் கட்குறு பல்அறை நோக்காது
பஞ்சணை ஒன்றில் பாய்ச்சிய நெஞ்சொடு
வஞ்சியறை வாளொடு மாப்பிளை புகுந்தான்.
இருபொற் பாவை ஏந்து விளக்கிடையில்
ஒரு தமிழ்ப்பாவை உறங்கக் கண்டான்.
அசைவறு முகநிலா மிசைவிற் புருவமும்
இசையுறு மலர்வாய் இருகனி யுதடும்
கொஞ்சுதல் போலவும் கிடந்தன ஒளியில்,
சரிந்து கிடந்த கருங்குழல் மீது
தெரிந்த அவள்முகச் செந்தா மரையில்
ஓடிய அவன்விழி உளத்தை யசைத்ததால்
"தேட முடியாச் செல்வம். மண்ணிடைப்
பார்க்க முடியாப் பலர்புகழ் ஓவியம்.
வார்க்காது நெஞ்சை மகிழ்விக்கும் தேன்.
தனக்கென்று வாழாள்; எனக்கென்று வாழ்வாள்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/103&oldid=1484386" இலிருந்து மீள்விக்கப்பட்டது