பக்கம்:காதலா கடமையா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?


“உனையொன்று கேட்பேன் உரையடா” என்று
முதிய தந்தை மொழியலானார்,
“ஏரி தோண்ட இல்லையே” என்றார்.
“இல்லை என்ப திராதென்றான்” மகள்.
“திருக்கிளர் நாட்டின் செல்வர்கட்கும்
இருக்கக் குடிசை இல்லை” என்றார்.
“இல்லை என்ற சொல் இரா”தினி என்றான்.
“கடல் நிகர் நாட்டில் கணக்கிலா மக்கள்
உடல் நலமில்லா தொழிந்தனர்” என்றார்.
“இல்லை என்பதே இராதினி” என்றான்.
“எப்படி அரசியல்” என்றார் கிழவர்.
“ஒப்பிட எவர்க்கும் ஒருவீ டொருநிலம்
ஒரு தொழில், ஓர் ஏர், உழவு மாடுகள்
விரைவிற் சென்றால் தருவார்” என்றான்.
கிழவி இதுகேட்டு விழியிற்புனல் சேர்த்துக்
“குழந்தாய், இப்போது கூறிய அனைத்தையும்
விரைவில் நான்போய் வேண்டிப் பெற்று
வரநினைக் கின்றேன் வருந்து கின்றேன்;
எட்டஊர் செல்ல வேண்டுமே
கட்டஓர் நல்லுடை இல்லை” என்றாளே.

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/113&oldid=1483539" இலிருந்து மீள்விக்கப்பட்டது