பக்கம்:காதலா கடமையா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் -38

 ("திருக்கிளர் நாட்டின் செல்வர்கட்கும் 
   இருக்கக் குடிசை இல்லை என்றார்")
 இடம்                   உறுப்பினர்
 மகிணனின்             கிள்ளை,மகிணன்
 இல்லம்.                மகிணனின் 
                         பெற்றோர்.
 இரண்டு குதிரைமேல் இரண்டுபேர். ஒருத்தி
 இருண்ட முகிற்குழல் ஏந்திழை கிள்ளை;
 ஒருவன் மகிணன்; ஓடின குதிரைகள்;
 திருமண மக்கள் சென்று, குடிசையில்
 கிழவி கிழவனைக் கிட்டி நின்றார்.
 தொழுது நிகழ்ந்தவை சொன்னார்.   
 சொன்னதும்,
 அன்னை, கிள்ளையின் கன்னம் தொட்டுப்
 “பொன்னே” என்று புரிந்த முத்தம்
 கிள்ளையின் உள்ளத் தெள்ளமு தாயிற்றே.
 கிள்ளையின் மாமனார் உள்ள மகிழ்ந்து 
 வாழ்த்துரை அனைத்தும் வழங்கி யிருந்தார். 
 அனைவரும் ஒருபுறம் அமர்ந்திருக்கையில்                   
                     111
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/112&oldid=1484500" இலிருந்து மீள்விக்கப்பட்டது