பக்கம்:காதலா கடமையா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 2


(“பொதுத்திரு மன்று போந்திடு கின்றான் புதுக்குக நகரைப் பொன்புதுக்கு தல்போல்”)

இடம்
கொன்றை நாட்டின்
தெருக்கள்.
உறுப்பினர்
முரசறைவோன்
பொதுமக்கள்.


வானேற்றும் மீசை வள்ளுவன், யானைமேல்
தானே றிக்குறுந் தடியால் இடியென
முழக்கிய பெரியதோர் முரசொலி, மக்களை
அழைத்தது; செவியில் ஆவல் வார்த்தது.

வள்ளுவன் சொன்னான்:
“தெள்ளுதமிழ்க் கொன்றைத் திருநா டுள்ளீர்,
மாழை நாட்டின் மன்னர் மன்னன்
வாழநாம், விடுதலை வழங்கும் நோக்கோடு
பொதுத்திரு மன்று போந்திடு கின்றான்
புதுக்குக நகரைப் பொன்புதுக் குதல்போல்.
தோளை இப் பணியில் தோய்ப்பீர் நன்றே
நாளை விடியலில் நடக்கும் இச்சிறப்பே”

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/20&oldid=1484387" இலிருந்து மீள்விக்கப்பட்டது