பக்கம்:காதலா கடமையா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆயினும்,
பிறர், பெரு மூச்செறிந்து பேசலுற்றார் :
ஒருவன், “தலைவரே, ஒன்று கேட்பீர்.
வருவது வருக; மறுத்தல் வேண்டா.
ஆட்சிநாம் அடைவோம்; அதன்பின்,
நாட்டுக் காவன நன்று முடிப்போம்!”
என்றான்.

“மாழை நாட்டு மக்கள், இந்த
ஏழை நாட்டின் இருப்பை யெல்லாம்
குந்தித் தின்று கொழுத்திருக் கின்றனர்.
அந்தமிழ் நாட்டுக் காவன செய்யப்
பொருளும் போத வில்லை”
என்றுமற் றொருவன் இயம்பினான்.

அங்கிருந் தஅவ் வழகின் பிழம்பு,
தங்கப் பாவை, தையல்மின் னிதழில்
அச்சம் அரும்பிற்று;

“மறுக்க வில்லை மறுக்க வில்லை;”
என்று தலைவன் இயம்பிய அளவில்
அஞ்சிய இதழ்கள் ஆங்கே
கொஞ்சின, “வெல்க கொன்றைநா” டென்றே.

 

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/19&oldid=1484264" இலிருந்து மீள்விக்கப்பட்டது