பக்கம்:காதலா கடமையா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 3


(“புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர் அல்லலிற் புறைந்தஎன் அகத்தை அறியார்”)

இடம்
கொன்றை நாட்டின்
முன்னாள் அரண்மனை.
உறுப்பினர்
கிள்ளை,
தோழி.


கொதிக்கும் நெஞ்சையும் குளிர்விக்கும் மாலை
மறைந்தது! வந்தது மாய்க்கும் இரவு.
புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர்
அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறிவரோ!”
கிள்ளைஇவ் வாறு கிளத்தினாள்.
தோழி நடுங்கிச் சொன்னாள்:
“என்கடன் யாதோ? என்கடன் யாதோ?
பொன்கடைந் தெடுத்த புத்தொளிப் பாவையே,
உன்நெஞ்சும், இளைத்த உடற்கு மருந்தும்,
பின்னாள் விரும்புமுன் பெருவாழ்வின் நோக்கமும்,
தன்னுளம் நாட்டுக்குத் தந்த தலைவன்பால்
சொல் எனில் சொல்வேன்,”
என்னலும்,

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/22&oldid=1484393" இலிருந்து மீள்விக்கப்பட்டது