பக்கம்:காதலா கடமையா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

நமைஅடையத்தகும் நாள் தொலைவில்லை?
உமக்கிதை உறுதியாய் உரைத்தேன்” என்னலும்
நன்றென நவின்று சென்றனர் மக்கள்.

தங்கவேல் மன்றில் தனித் திருந்து
பொங்கு காதலால் புழுவாய்த் துடிக்கும்
மன்னனைக் கண்டான். மன்னன், “எங்கே
புன்னகை? எங்கே புதிய நிலவு?
கோடையிற் குளிர்மலர் ஓடை எங்கே?
ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?
எங்கே கிள்ளை என்று பதறினான்”
“அங்கே அவளை அடைவோம்,” என்று
தங்கவேல் தணிவு சாற்றினான். மன்னன்
“அவள்தன் விருப்பம் அறிவித்தாளா?
இவண் அதை உரைப்பாய்” என்றான். தங்கவேல்

“வெயில்நிகர் மணிகள் அயல் ஒளிப்பதக்கம்
பயிலும் மார்பும் பட்டு சட்டையும்
படர்விழி பறிக்கும் பன்மணி முடியும்
கடலிடை எழுந்த சுடர்நிகர் முகமும்
கட்டிள மையும் கிள்ளையின் கண்ணில்
பட்டால் அவள்உளப் பறவை நும் வலையில்
கட்டா யம்படும்! கடிது புறப்படும்!”

என்னலும் மன்னன் ஏதும் உரையாது
பொன்னு டைமணி இழைபூண்டு, தங்கவேல்
வழிநடக்க நடந்து சென்றான்
அழகிய தங்கத்தேரென ஆங்கே.

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/51&oldid=1483880" இலிருந்து மீள்விக்கப்பட்டது