பக்கம்:காதலா கடமையா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 14


(“கோடையிற் குளிர்மலர் ஓடைஎங்கே?
ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?)


இடம்
ஊர்ப்பொது
மன்று.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
தங்கவேல்,

பொதுமக்கள்.

றுநாள் ஊர்ப்பொது மன்று சூழ
நிறைபெறு மக்கள் நின்றனர். மன்னனை
விடுதலை அறிக்கை வேண்டிக் கூவினர்;
விடுவழி விடுவழி வேந்த னிடத்துச்
சென்று நானே செய்தி அறிவேன்
என்றான் ஒருவன்! நன்றோ இதுதான்
என்றான் ஒருவன்! எந்நாள் கொடுப்ப
தென்றான் ஒருவன்! இன்றே அளிக்க
என்றான் ஒருவன்! இந்த நிலையில்
தங்கவேலன் அங்கு வந்தான்,

அங்கிருந்தார்க் கெலாம் அறிவிக்கின்றான்:
“அமைதியாய் இருப்பிடம் அடைவீர், விடுதலை

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/50&oldid=1484521" இலிருந்து மீள்விக்கப்பட்டது