பக்கம்:காதலா கடமையா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்லது மயிலே! நல்லது மயிலே!
அல்லது தீமை அனைவர்க்கும் அன்றோ!”
என்று மன்னன் இரங்கிச் சொன்னான்.

ஒன்றும் உரையாது நின்றாள் கிள்ளை.
தன்சொற் கேளாது தள்ளாடி ஓடித்
தின்பண்டம் நாடும் சிறுகு ழந்தைபோல்
மொய்குழல் மீது மொய்த்த தன் விழியை
வெய்துயிர்த்து மீட்டு, மன்னன்
வாயோய்ந்து வெளியில் வந்தான்.
அவனைக் காயோ பழமோ கழறுக
என்று தங்கவேல் கேட்டான். மன்னன்
தங்கம் உருகுதல் தணற்கென் றேகினனே.

 

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/54&oldid=1484472" இலிருந்து மீள்விக்கப்பட்டது