பக்கம்:காதலா கடமையா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 16


(“மாழை நாட்டினர் வந்தபின் அன்றோ
ஏழைமை தன்னை எய்திற்றுக் கொன்றை!”)


இடம்
கொன்றை நாட்டு
முன்னாள்
அரண்மனை.
உறுப்பினர்
ஒள்ளியோன்,
மாழைப் பேரரசு,

பொதுமக்கள்,
தாரோன்.


“கெஞ்சிப் பார்த்தேன். கேள்நீ ஒள்ளியோய்
அஞ்சுமாறு கிள்ளைக்கும் அனைவர்க்கும் சொன்னேன்
சென்றஎன் உள்ளமோ திரும்புவ தின்றி
மின்னிடை தன்பால் வீழ்ந்தது,! துன்பம்
கடக்குமுறை எதுவெனக் காணின், நாட்டில்
அடுக்குமுறை ஒன்றினால் ஆகும். ஒள்ளியோய்
உன்னிலும் எனக்கோ ஒருவரும் நற்றுணை
இந்நி லத்தில் இல்லை. அமைச்சனோ
கொன்றை நாட்டுக்குக் கொடுக்கும் உரிமையை
இன்றே கொடுத்தல் ஏற்றதென் கின்றான்.”
என்று மன்னன் இயம்பும் போதே
அன்றுபோல் இன்றும் மன்று சூழ

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/55&oldid=1484481" இலிருந்து மீள்விக்கப்பட்டது