பக்கம்:காதலா கடமையா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இன்றுநான் இடர்பல ஏற்பேன். அஞ்சிடேன்.
என்னைத்தன்னுயிர் என்று நினைப்பாள்
தையல் என்நிலை தாங்காள். உலகில்
உய்ய மறுத்தே உயிர்விடு வாளோ!
அவள்பொருட் டஞ்சினேன் ஐயகோ! அந்தத்
துவளிடைக் கிள்ளையின் துயரம் மாற்றத்
தங்கவேல் உள்ளான்; தகுபண் புள்ளான்;
மங்காத ஆற்றல் வாய்ந்தவன்” என்று
சிறையிடைத் துன்பச் சேற்றில் சிக்கி
உறுவரிப் புலிபோல் உலாவி இருந்தான்.

வாட்பொறை, கிள்ளையை மகிணனை எண்ணி
“மீட்சி என்று,நம் ஆட்சி என்று
மன்னன் தீமை மாறுவ தெந்நாள்?”
என்று துடித்தான் இருண்ட சிறையில்.
வீடுதோறும் நாட்டு மக்கள் படும்
பாடு, நவிலவும் படுவ தன்றே.

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/81&oldid=1484446" இலிருந்து மீள்விக்கப்பட்டது