பக்கம்:காதலா கடமையா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 27



("ஓம்புதல் பெற்றீர் உயிர் துடிக்கின்றீர்
பாம்புநிகர் மன்னனைப் பழிவாங்கேனோ")


இடம்
கொன்றை நாட்டுச்
சிறைக்கூடம்.
உறுப்பினர்
தாரோன், மகிணன்,
வாட்பொறை.


தாரோன் சிறையின் சன்னலின் கம்பியை
ஆறும் அறியா தகற்ற முயன்றான்.
அவனுளம் அரசன் ஆவியைப் போக்க
ஓடிற்று; நல்லுயிர் உலகை வெறுத்தது.
ஆடின இருதோள். அலறின உதடுகள்,

“கொன்றை நாட்டு மக்காள். கொடுமையால்
இன்று நலிந்திரோ” என்று கூவினான்.
“இமைகள் இரண்டும் இருவிழி காத்தல்போல்
தமிழரே, மகிணன் தலைமையில் நாடொறும்
ஓம்புதல் பெற்றீர் உயிர்துடிக் கின்றீர்
பாம்புநிகர் மன்னனைப் பழிவாங்கேனோ”
என்று துடிதுடித் திருந்தான். மகிணனோ,

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/80&oldid=1484459" இலிருந்து மீள்விக்கப்பட்டது