பக்கம்:காதலா கடமையா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைகள், தொழிலகம் கதவடைக் கச்செய்.
தடவயல் உழவும் நடவா மைசெய்.
ஒருவீட்டி னின்றும்மற் றொருவீட்டுக் கொருவன்
வருதலின்றி வழுவாது பார்த்திடு.
மன்னனின் ஆணை மறவேல்” என்றான்.

“தங்கவேல் பதைத்துத் தரையிற் புரண்டு
மங்காப் புகழுடை மன்னா மன்னா
கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ?
நன்றிதோ நன்றிதோ”! என்று கெஞ்சினான்.

ஆணையை நடத்த அவ்வொள்ளி யோனும்
படையின் தலைவனும் பறந்தார். மன்னன்
“தங்கவேல், மங்கையைத் திருத்துக.
இங்கிரேல்” என்றான். ஏகினான் அவனுமே.

 

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/79&oldid=1484461" இலிருந்து மீள்விக்கப்பட்டது