பக்கம்:காதலா கடமையா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 26



(“கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ?
நன்றிதோ நன்றிதோ” என்று கெஞ்சினான்”)


இடம்
கொன்றை நாட்டு
அரண்மனை.
உறுப்பினர்
மாழைப் பேரரசு
ஒள்ளியோன்,
தங்கவேல்


கொள்ளாக் காதலொடு கொற்றவன் இருந்தான்
ஒள்ளியோனும் உடன் அமர்ந் திருந்தான்.
படையின் தலைவனோர் பாங்கர் இருந்தான்.

தடதடவென்று தங்கவேல் வந்து
“கிள்ளை என்மொழி கேட்கிலள்”, என்றான்
துள்ளி எழுந்து சொல்வான் மன்னன் :

“ஒள்ளியோய் நேற்றுமுன் உன்னை எதிர்த்துத்
துள்ளிய பலரையும் சுட்டிக் காட்டுக.
படையின் தலைவனே கடிதே அவர்களை
அடைக்க சிறையில். அதுவும் அன்றி,
வீட்டினின்று மக்கள் வெளிவரா மற்செய்,
கூட்டம் எங்கும் கூடா வகைசெய்.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/78&oldid=1484425" இலிருந்து மீள்விக்கப்பட்டது