பக்கம்:காதலா கடமையா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்.
போ” எனச் சொன்னாள் பூவிழி நெருப்புக.
கோஎன அழுதே கூறுவான் தங்கவேல்;

“சிறையினில் எனையும்அத் தீயோன் சேர்ப்பான்
பிறகெவர் உள்ளார்? அறைக கிள்ளையே.
அரசனை அணுகி அறிவு புகட்டினேன்.
‘திருமுகத் தாளைநான் சேரும் படிசெய்’
என்று நஞ்சென இயம்பினான், வந்தேன்
உன்னுளம் சொல்லுக. உரைப்பேன் அவனிடம்.”

என்று சொல்லவும்,
“என்னுளம் என்னிடம் ஏது, கூறுக
மகிண னிடத்தில் வாழ்வ தன்றோ?
என்னிடம் இம்மொழி இயம்பவும் ஒண்ணுமோ
உன்னிடம் அறிவும் ஒழிந்த தேயோ?”
என்று கூறினாள் கிள்ளை.
சென்றான் தங்கவேல் மன்ன னிடத்தே.

 

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/77&oldid=1484417" இலிருந்து மீள்விக்கப்பட்டது