பக்கம்:காதலா கடமையா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 25



(“தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன்
இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்.”)


இடம்
கொன்றை நாட்டு
முன்னாள் அரண்மனை.
உறுப்பினர்
தங்கவேல்,
கிள்ளை.


"தங்கவேல், இதுவும் தகுமோ உனக்கே?
எங்குளாய்? கொன்றை இகழ வாழ்ந்தனை.
அன்பரை, அண்ணலை அரசன் வருத்திட
உன்துணை பெரிதும் உதவிற் றேயோ?
நாட்டினைப் பிறன்பால் காட்டிக் கொடுத்தும்
வாழஒப் பிற்றோ மற்றுன் உள்ளமும்?
மாழைநாட்டான் மகிழ நடந்திவ்
வேழை நாட்டை ஏற்கஎண் ணினையோ?
எங்கே வந்தாய்? என்னுளம் மாற்றவோ?
சிங்கம் உண்பதைச் சிறுநரிக் காக்கவோ?
கொன்றை நாட்டைக் குறைவு படுத்தவோ?
உன்றன் கருத்தை ஒப்பேன். போய்விடு.
தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன்

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/76&oldid=1484415" இலிருந்து மீள்விக்கப்பட்டது