பக்கம்:காதலும் கடமையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 13 சரோஜா : ஆமாம், அப்படிச் செய்யத் தொடங்கி ஒல் அம்மாள்மனம் பூரித்துப்போவாள். அநாவசியமான சந்தேகங்களேயெல்லாம் கற்பனை செய்துகொண்டு என்னே இப்படித் தினமும் வேதனைக்குள்ளாக்க மாட்டாள். கேசவன் : சரோஜா, நீ உன் தாயாரிடம் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிருய் என்பது எனக்குத் தெரியாத விஷயம் அல்ல. நீ எனக்காக அவர்கள் விருப்பத்தைக் கூட மீறி நடந்து வந்திருக்கிருய். உன்னே மனவியாகப் பெறுவதற்கு நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேணும். சரோஜா (புன்னகையோடு) : கேசவ், உங்களிடத் திலே எனக்குள்ள காதலைப்பற்றிப் புகழ்ந்து பேசுகிறீர் கள்: ஆளுல் அதென்ன அவ்வளவு பெரியதா? உங்க ளுடைய உள்ளத்தை நான் அறியாதவளா? அதிலே எனக்காகப் பொங்கிக்கொண்டிருக்கும் அன்பை நான் அறிந்திருக்கும்போது என்னுடைய அன்பைப்பற்றி நான் எப்படிப் பெருமைப்பட முடியும்? கேசவன் (அவளைத் தழுவிக் கொண்டு) . சரோஜா உண்மையிலேயே நான்தான் மிகுந்த பாக்கியசாலி. உன்னைப்போல என்னுள்ளத்தை நன்முக யார் அறிய முடியும்? என்னுள்ளத்தை நீ நன்முக அறிவாய் என்று சொல்வதுகூட அவ்வளவு சரியில்லேயென்று தோன்று கிறது. அந்த அன்பைப்பற்றி எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. சரோஜா : கேசவ், எதற்காக அதைப்பற்றி நாம் பேசவேணும்? உள்ளமும் உள்ளமும் தெரிந்துகொண் -ால் அது போதாதா? கேசவன் : ஆமாம், சரோஜா. சொல்லுவதுதான் சரி. என்னலே வார்த்தையாலே சொல்ல @fil-lidst št.