பக்கம்:காதலும் கடமையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} காதலும் கடமையும் யென்று இன்றைக்குத்தான் சொல்விக்கொண்டிருந் தாள் - கேசவன் (சற்று யோசனை செய்துவிட்டு) : அம்மா வரிடம் நான் கலியானம் செய்துகொள்ளப் போவதில்லை என்கிற விஷயம் சொன்னயா? சரோஜா : ஆமாம், அதைப்பற்றியெல்லாம் சேட்ட பிறகுதான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். கேசவன் (திகைப்புற்று நின்று) : திடீரென ஏற் பட்ட அதிர்ச்சிதான் காரணமாக இருக்க வேண்டும். முதல் இருபத்துநாலு மணி நேரம் ரொம்ப ஜாக்கிரதை யாகக் கவனிக்க வேண்டும்; பக்கத்திலே யாராவது இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. சரோஜா : நான் பார்த்துக்கொள்கிறேன் டாக்டர். கேசவன் : நீயே எப்படி இரவு முழுவதும் விழித் திருப்பாய்? இன்னொருவர் யாராவது கூட இருந்தால் நல்லது. சரோஜா : எனக்கு இந்த ஊரிலே வேறு யாரிருக் கிரு.ர்கள்? கேசவன் : நான் ஒரு நர்ஸை அனுப்புகிறேன். அதோடு ஆக்சிஜன் சிலிண்டரும் அனுப்பி வைக்கிறேன். சரோஜா (கவலையோடு) ; ஆக்சிஜன் கொடுக்க வேனுமா? கேசவன் : கொடுத்தால்தான் நல்லது. அதோடு மூன்று நான்கு மாதம் படுக்கையிலேயே வைத்து சிகிச்சை பண்னவேண்டும். சில நாட்களில் கொஞ்சம் பலம் வந்த வுடன் நம்ம ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வது நல்லது. அங்கே வைத்து நான் எல்லாம் கவனிக்கிறேன். நீ கவலைப்பட வேண்டியதில்லை,