பக்கம்:காதலும் கடமையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்தலும் கடமையும் 31 சரோஜா : ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லாமல் முடியாதா, டாக்டர்? -- - - - கேசவன் : அங்கே இருந்தால்தான் இரவு பகல் எந்த நேரமும் நான் கவனித்துக்கொள்ள முடியும். நர்ஸ் களும் எப்பொழுதும் இருப்பார்கள். சரோஜா : அப்படி அம்மாளை அங்கே கொண்டு போய் நீண்டநாள் வைத்திருக்க வேண்டுமா ல்ை நான் உங்களிடத்திலே ஒரு விஷயம் கேட்டுக்கொள்ள வேணும். கேசவன் : என்ன விஷயம்? சரோஜா : உங்கள் ஆஸ்பத்திரியிலேயே நோயாளி களுக்குப் பணிவிடை செய்யும் வேலை எனக்குக் கொடுங்கள். கேசவன் : உனக்கு வேலையா? அது சரிப்படாது. நீ அங்கே வேலே செய்கிறதென்பது முடியாத காரியம் . சரோஜா (சற்றுக் கண்டிப்பாக) : அப்படியானல் அம்மாளுக்கும் அங்கே சிகிச்சை செய்யவேண்டியதில்ல்ை. தருமத்திற்கு வைத்தியம் செய்துகொள்ள நான் இன்னும் அவ்வளவு கேவலமாகப் போய்விடவில்லை. கேசவன்: அம்மாளேச் சரியாகக் கவனிக்காவிட்டால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து நேரலாம். இந்த இருதய நோய் சாதாரணமானதல்ல. சரோஜா : அம்மா என்றும் சிரஞ்சீவியாக இருப் பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சாவு வருவது நிச்சயமானுல் அதை உங்களாலும் தடுக்க முடியாது. கேசவன் : சரோஜா, நீ பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் வேலை செய்ய உனக்குப்