பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காதலும் கல்யாணமும்

பிடிக்கிறார்; உடனே அவளுக்கு நகை, நட்டு, துணிமணி, வீடு வாசல் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். அவள் மேல் கொண்ட ஆசை தீரும் வரை அவளுடன் குடித்தனம்; அதற்குப் பிறகு தடித்தனம்-அதாவது தன்னை விட்டால் போதும் என்ற நிலைக்கு அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுத் தான் தப்பிவிடுவது

இந்த முறையில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு என்றாலும், அதை நிரவல் செய்ய அவரிடம் எல்லாம் வல்ல பணம் இருக்கிறது. அந்தப் பணத்தின் பக்க பலத்தைக் கொண்டு, ‘அடுத்தது, அடுத்தது என்று அவர் பாட்டுக்குத் தாவிக்கொண்டே இருக்கிறார்:

தனக்கோ?-ஏதோ கேட்கும்போது ஏதாவது கொடுத்து விட வேண்டியது-அதோடு சரி

அப்படித்தான் என்ன கேட்க முடிகிறது. அவரை - மைனர் சங்கிலி கேட்க முடிகிறது; டெர்லின் சட்டை கேட்க முடிகிறது. ரோலெக்ஸ் கடிகாரம் கேட்க முடிகிறது; வைர மோதிரம் கேட்க முடிகிறது; செலவுக்கு ஐம்பதும் நூறும் வேண்டுமென்றால் கேட்க முடிகிறது-அவற்றைத் தவிர?

அருணாவைப்போன்ற ஆரணங்குகளுக்கு நகை நட்டு வேண்டுமென்றால் கேட்க முடிகிறதா? துணிமணி வேண்டு மென்றால் கேட்க முடிகிறதா? வீடு வாசல் வேண்டு மென்றால் கேட்க முடிகிறதா

அதெல்லாம் கேட்க முடியாமல்தானே அவளைப் போன்றவர்களைத் தன் காரியம் முடியும் வரை ‘கல்யாணம் செய்து கொள்கிறேன், கல்யாணம் செய்துகொள்கிறேன்!” என்று சொல்லிக் காதலித்துத் தொலைக்க வேண்டி யிருக்கிறது? அதனால்தானே பல சிக்கல்களுக்கு உள்ளாகித் தான் அவ்வப்போது தவிக்க வேண்டியிருக்கிறது?

என்னத் தொல்லை, போங்கள் ஏழையாய்ப் பிறந்தாலும் தொல்லையாயிருக்கிறது; பணக்காரனாய்ப் பிறந்தாலும் தொல்லையாயிருக்கிறது!