பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 123

என்ன வேதனை, என்ன வேதனை-நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே?

இப்போதுப் பார், இந்த அருணா இங்கே வந்திருப்பாள் என்று நான் நினைத்தேனா?-இல்லை, ஒட்டல் வாசலோடு என்னை விட்டிருப்பாள் என்று நினைத்தேன். ‘இவள் போனால் இன்னொருத்தி’ என்று ரூபாவை இங்கே வரச் சொல்லிவிட்டு வந்தேன்; அவளும் வந்தாள்-ஆனந்தமாக சினிமாப் பார்த்து விட்டு அடுத்தாற்போல் வேறுஏதாவது ஒர் ஒட்டல் அறையை நாடலாமென்று இருந்தேன்-அதற்குள் என்ன நடக்கிறது -இவள் எனக்கு அவளை அறிமுகம் செய்து வைக்கிறாளாம், அறிமுகம்!

இனிமேல் நான் இங்கே நிற்க முடியுமா? நழுவ வேண்டியதுதான். இப்படி எத்தனை நாட்கள் நழுவிக் கொண்டு இருப்பேன், நான்?

இந்த இடம் மட்டும் பொதுஇடமாயில்லாமல் தனிஇடமாயிருந்திருந்தால்?-அருணாவும் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியாது; ரூபாவும் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியாதே!

இதற்குத்தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அப்பா சாகவேண்டுமென்று நான் நினைக்கிறேன்.எங்கே சாகிறார்?

சில பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கென்றே உண்டான இந்த வருத்தத்துடன் அவன் அங்கிருந்து நழுவியபோது, வலிமை மிக்க கை ஒன்று அவனுடைய கையை அழுத்திப் பிடித்தது. திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது அந்தக் கை மணியின் கையாயிருந்தது!