பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காதலும் கல்யாணமும்

தன்னால் இப்போது முடியாத காரியம். ஆகவே, இவனும் இவனால் தடுத்தாட்கொள்ளப்படுபவர்களும் எப்படியாவது போய்த் தொலையட்டும் என்று சினிமா விட்டதும் தான் பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டுவிட வேண்டும். இன்றைய இரவையாவது எந்தவிதமான ஏமாற்றமும் இல்லாமல் இன்பமுடன் கழிக்க!

அங்கேதான் மனிதனுக்குப் பூரண சுதந்திரம் இருக்கிறது; அங்கேதான் உலகப் பெருங் கவிஞன் உமர்கய்யாம் வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை நெறி அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது-அதாவது, மதுவும், மங்கையுமே வாழ்க்கை; மனிதனுக்கு அதை விட்டால் வேறு வாழ்க்கையும் இல்லை, இன்பமும் இல்லை!

என்ன அற்புதமான தத்துவம், என்ன அற்புதமான தத்துவம்'-இல்லாதவன் அதை வெறுக்கலாம்; இருப்பவன் அதை ஏன் வெறுக்கவேண்டும் 7-எல்லாம் விதி விட்ட வழி!-ஆம், எனக்குப் பக்கத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பயல், காலையிலிருந்து என் கழுத்தை அறுத்துக் கொண்டு இருக்கிறானே, அது கூட விதி விட்ட வழிதான்

பெண்ணே நீ இந்த மதுக் கிண்ணத்தை நிரப்பு, நிரப்பிக்கொண்டே இரு அச்சமின்றி இப்படிக் கேட்க இப்போதும் ஓர் இடம் இருக்கிறதென்றால், அதுதான் பாண்டிச்சேரி, சலோ பாண்டிச்சேரி

இப்படி தனக்குத்தானே உத்தரவு போட்டுக்கொண்டு அவன் தன்னை மறந்து எழுந்தபோது, ‘படம் இன்னும் முடியவில்லை, உட்கார்’ என்று அவன் தோளின்மேல் கையை வைத்தான் மணி: ‘ஓகோ, படம் இன்னும் முடியவில்லையா?’ என்று ஏமாற்றத்துடன் சொல்லிக் கொண்டே சுந்தர் உட்கார்ந்தான்

படம் முடிந்தால் என்ன, முடியாவிட்டால் என்ன? இவனைத் தான் ஏன் உட்கார வைக்கவேண்டும்? தான் வந்த